ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய முயற்சி
கைது செய்வதற்காகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவை குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு அழைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தகவல் வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக வெளியிட்ட தகவல்கள் தொடர்பில் அவரை கைது செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தின் மீது குற்றஞ்சுமத்தியிருந்தனர்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஹரின் பெர்னாண்டோ நாடாளுமன்றத்தில் வெளியிட்ட தகவல் நாடாளுமன்ற உறுப்பினரின் சிறப்புரிமைக்கு உட்பட்டதால், அவர் கைது செய்யப்பட மாட்டார் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டிருந்தார்.
எனினும் இதனை ஏற்றுக்கொள்ளாத எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக குற்றவியல் விசாரணை திணைக்களத்திற்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டனர் பின்னர், ஹரின் பெர்னாண்டோ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.