மருதமடு கிராமத்தின் அரச காணி, தனி நபரால் அத்துமீறி கையகப்படுத்தும் முயற்சி தடுத்து நிறுத்தம்!
மன்னார் - முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மருதமடு கிராமத்திற்குச் சொந்தமான 14.5 ஏக்கர் அரச காணியை அபகரிக்க மேற்கொள்ளப்பட்டு வந்த நடவடிக்கை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
குறித்த கிராமத்திலுள்ள காணியை வேறு கிராமத்தவர் அனுமதிப்பத்திரங்கள் இன்றி அடாத்தாக அபகரிக்க முற்பட்டுப் புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்த வேளை அக்கிராம மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் கவனத்திற்குக் கொண்டு சென்றனர்.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் நேற்று(16) மாலை குறித்த பகுதிக்கு விஜயம் செய்து நிலைமையை நேரடியாக அவதானித்தார்.
இவ்விடயம் தொடர்பாக முசலி பிரதேச செயலாளருடன் கலந்துரையாடினார்.
முசலி பிரதேச காணி உத்தியோகத்தர்கள் மற்றும் கிராம உத்தியோகஸ்தரும் அவ் இடத்திற்கு வருகை தந்து இக்காணி அரச காணியாக எல்லை படுத்தப்பட்ட காணி என்பதை உறுதி செய்தனர்.
இக் காணி அடாத்தாகப் பிடிக்கப்பட்டுப் புனரமைக்கப்பட்டு வருவதாக அரச அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெரியப்படுத்தினர்.
இதனையடுத்து குறித்த நடவடிக்கை உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு மருதமடு கிராமத்தில் காணியற்ற மக்களுக்கு உடனடியாக இக் காணிகளைப் பிரித்து வழங்கும் படி முசலி பிரதேச செயலாளருக்குப் நாடாளுமன்ற உறுப்பினரால் பரிந்துரை செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.












தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

அடம்பிடித்த அன்புக்கரிசி.. தயங்கி நிற்கும் அக்கா பாசம்- பேசாமல் ஒதுங்கிய குணசேகரன் குடும்பம் Manithan
