தமிழர் பகுதியில் வழிபாட்டுக்கு சென்று திரும்பியர்கள் மீது தாக்குதல்
உழவு இயந்திரத்தில் பயணித்த குழுவினர் மீது மற்றுமொரு குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
இந்த தாக்குதலில் இரு பெண்கள் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தடைகளை ஏற்படுத்தி தாக்குதல்
மன்னார் - யாழ்ப்பாணம் வீதியில் வெள்ளாங்குளம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த குழுவினரே இந்த தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

உழவு இயந்திரம் பயணித்த போது வீதியில் தடைகளை ஏற்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியதுடன் தனிப்பட்ட தகராறு காரணமாகவே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் வெள்ளாங்குளம் பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
you my like this video
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri