மட்டக்களப்பில் மதுபானசாலை முகாமையாளரை தாக்கியவர்களில் ஒருவர் கைது.. இருவர் தலைமறைவு
மட்டக்களப்பு - புதூர் பிரதேசத்திலுள்ள மதுபானசாலை முகாமையாளரை தாக்கிய சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இருவர் தலைமறைவாகியுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களில் ஒருவர் இன்று(16.01.2026) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஒருவர் கைது
புதூர் பிரதேசத்திலுள்ள மதுபான சாலையில் கடந்த 9ஆம் திகதி இரவு, நான்கு பேரை கொண்ட குழுவினர் மதுபானம் அருந்துவதற்கான சென்றுள்ளனர்.
அருந்திய மதுபானத்துக்கான பணத்தை முகாமையாளர் கேட்ட போது, அவரை அங்குள்ள முகாமையாளர் அறைக்குள் அழைத்து சென்று மதுபானப் போத்தலால் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தில் முகாமையாளர் கடுமையாக படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதலை நடத்தியவர்கள்அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.
இதனை தொடர்ந்து தாக்குதல் நடத்தியவர்களை பொலிஸார் தேடி வந்த நிலையில், தலைமறைவாகியிருந்த மூவரில் ஒருவர் இன்று(16) கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இருவர் தலைமறைவாக இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைப்படுவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.