வலயக்கல்வி பணிப்பாளர் தாக்கப்பட்டமை வன்மையான கண்டனத்திற்குரியது - இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம்
கிளிநொச்சி வலயக் கல்விப்பணிப்பாளர் நேற்றைய தினம் தாக்கப்பட்டமை வன்மையான கண்டனத்திற்கு உரியது.
இதனை அனுமதிக்க முடியாது. தாக்கியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதுள்ள நெருக்கடியான உயிராபத்து உள்ள காலகட்டத்தில் பணியில் தம்மை அர்ப்பணித்துள்ள பணியாளர்கள்மீது தாக்குதல் நடத்தப்படுகின்றமை மோசமான செயலாகும்.
அதிலும் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் தற்போது ஆற்றுகின்ற பணி மிகவும் உன்னதமானது.
இதனை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஏதாவது தவறுகள் இருப்பின் அது தொடர்பில் முறைப்படி நாம் அணுகி அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
பாடசாலைக் காவலாளி ஒருவர் வலயக் கல்வி அலுவலகம் சென்று பணிப்பாளரைத் தாக்குவதென்பது சாதாரண விடயம் அல்ல.
இதே காவலாளி தான் பணியாற்றிய இடங்களில் பல தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதும், இவரது மனைவி ஒரு அதிபர் என்பதனையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இத்தகைய தாக்குதலாளியின் பின்னணி என்ன? இவர் ஏன் வலயக்கல்விப் பணிப்பாளரைத் தாக்கினார்.
இதன் பின்னணியில் வேறு நபர்கள் உள்ளனரா என்பது பற்றித் தீர விசாரிக்க வேண்டும். கிளிநொச்சி கல்வி வலயம் பல்வேறு துயர்களைத்தாண்டி கல்வி நிலையில் மீள ஆரம்பித்துள்ளது.
அதற்கு அங்கு கடமை புரியும் ஆசிரியர்கள், அதிபர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் அனைவருமே பங்காளர்கள். இதனை அங்கு வாழுகின்ற அனைவரும் புரிந்துகொள்வதோடு அதற்கு ஒத்தாசையாக இருக்கவேண்டும்.
2020 நடைபெற்ற உயர்தர பரீட்சை முடிவுகளின்படி வடக்கு மாகாணம் ஆறாவது இடத்தில் கணிக்கப்பட்டாலும் உண்மையில் வடக்கு மாகாணம் முதல் நிலையில் உள்ளது.
தொழினுட்ப பிரிவுகளில் வடக்கு மாகாண மாணவர்கள் தோற்றிய வீதம் குறைவடைந்துள்ளமையும், முதல்நிலையில் உள்ள ஏனைய ஐந்து மாகாணங்களில் தொழினுட்ப பிரிவுகளில் அதிகளவான மாணவர்கள் தோற்றியமையும் வடக்கு மாகாணம் ஆறாம் நிலை காட்டுவதற்குக் காரணமாகின்றது.
அத்தகைய தொழினுட்ப பாடப் பெறுபேறுகளை விலக்கி கணிப்பீட்டைப்
பார்க்கின்றபோது வடக்கு மாகாணம் முதலிடத்தில் இருப்பது தெரியவரும்.
எதிர்காலத்தில் அதற்கான முயற்சிகளும் எடுக்கப்படவேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri
