சமுதித மீது தாக்குதல் நடத்த திட்டம்! டுபாயிலிருந்து கசிந்த தகவல்
மூத்த ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரம (Chamuditha Samarawickrama) மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஊழல் ஒழிப்பு செயலணியின் நடவடிக்கைப் பிரிவு பணிப்பாளர் நாமல் குமார தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள காணொளியிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு டுபாய்க்கு தப்பிச் சென்ற குழு ஒன்றே சமுதித மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக நாமல் குமார குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி மூலம் தகவல்
இந்த தகவலை நாமல் குமாராவிற்கு, டுபாயில் உள்ள தகவல்கொடுக்கும் நபர் ஒருவர் கூறியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், சமுதித, ராஜபக்சர்களை நல்லவர்களாக காட்ட முயற்சி செய்வதாகவும் இதனால் அதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் இலங்கையில் இருந்து டுபாயில் உள்ள குற்றக்கும்பலுக்கு தொலைபேசி மூலம் தகவல் அனுப்பப்பட்டுள்ளதாகவும் நாமல் குமார விவரித்துள்ளார்.
இந்நிலையில், தேவையான எந்த விடயங்களையும் எந்த நேரத்திலும் பாதுகாப்பு படையினருக்கு வழங்க தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
You may like this,

திருமணத்திற்கு 3 ஆண்டுகளுக்கு முன் கணவருடன் DJ பார்ட்டியில் பிரியங்கா தேஷ்பாண்டே.. வீடியோ இதோ Cineulagam

பிரியங்கா தேஷ்பாண்டே திருமணத்தில் கலந்துகொண்ட விஜய் டிவி பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த தந்தையின் பழைய பாஸ்புக்.., ஒரே இரவில் மகன் கோடீஸ்வரன் News Lankasri
