பெண்களை பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்த ஆண் பொலிஸார்! செல்வராசா கஜேந்திரன் காட்டம் (Video)
பெண்களை ஆண் பொலிஸார் பலவந்தமாக தள்ளி நெஞ்சிலேயே அடித்து மிகவும் மோசமான முறையில் நடந்து கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
குருந்தூர்மலை பகுதியில் நேற்று (14.07.2023) பிரதோச தினத்தில் பொங்கல் நிகழ்வை முன்னெடுக்கவுள்ளதாக ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
இந்நிலையில் கல்கமுவ சந்தபோதி தேரர் இங்கு இனமுறுகல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் குறித்த பொங்கல் நிகழ்வை தடுத்து நிறுத்துமாறும் முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திலும் கடந்த 11.07.2023 அன்று முறைப்பாடு பதிவு செய்திருந்தார்.
இவற்றுக்கமைய முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் தடை உத்தரவினை கோரியிருந்த போதும் நீதிமன்றானது, அவ்வாறு வழிபாட்டிற்கு தடை விதிக்க முடியாது என்றும் விக்கிரகங்களை அங்கு பிரதிஸ்டை செய்யாமல் பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்ளவும் அனுமதி வழங்கியிருந்தது.
இவ்வாறான சூழலில் குறித்த தேரர் தென்பகுதியில் இருந்து சிங்கள மக்களையும் தேரர்களையும் அழைத்து வந்து குருந்தூர்மலை விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார். இதன்போது அப்பகுதியில் தமிழ் மக்கள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு பொங்கல் நிகழ்விற்கும் இடையூறு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே செல்வராசா கஜேந்திரன் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

உலகின் பணக்கார குடும்பம் இதுதான்; மொத்தம் 15,000 உறுப்பினர்கள் - செலவு எவ்வளவு தெரியுமா? News Lankasri

மஹிந்திரா நிறுவனம் தயாரிக்கவுள்ள Rare Earth Magnets - சீனாவிற்கு எதிரான இந்தியாவின் தற்சார்பு முயற்சி News Lankasri

பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு - க்வார் அணையை முடிக்க இந்தியா ரூ.3,119 கோடி கடன் பெற முடிவு News Lankasri
