மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல்: கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
மட்டக்களப்பு- வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்து இதற்கு காரணமானவர்களை கைது செய்து கோரி போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த போராட்டமானது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களால் நேற்று (23) செயலகத்தின் முன்னால் நடாத்தப்பட்டுள்ளது.
கடந்த 20ஆம் திகதி கோறளைப்பற்று-வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றிவரும் கிராம உத்தியேயாகத்தர் கடமை நிமித்தம் தனது பிரதேசததிற்கு சென்று வரும் போது சில நபர்களினால் தாக்கப்பட்டடையடுத்து அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல்
இவ்வாறு கிராம உத்தியோகத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்களை பொலிஸார் கைது செய்யவில்லை எனவும் இந்த தாக்குதலை கண்டித்து பொலிஸார் சட்டநடவடிக்கை எடுக்குமாறும் கோரி பிரதேச செயலக உத்தியோகத்தர்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, கைது செய் கைது செய் தாக்கிய வரை, அரச உத்தியோகஸ்தரின் பாதுகாப்பை உறுதி செய், கடமையை செய்தால் உயிருக்கு அச்சுறுத்தலா, அரச பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு எப்போது தீர்வு, போன்ற வாசகங்களை கொண்ட சுலோகங்கள் ஏந்தியவாறும் கோஷங்கள் எழுப்பியவாறும் உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மகஜர் கையளிப்பு
இதனைதையடுத்து, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வசந்த பண்டார அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடினார்.
அத்தோடு, போராட்டக்காரர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரியிடமும் பிரதேச செயலாளரிடமும் மனு ஒன்றை கையளித்துள்ளனர்.
மேலும், பொலிஸ் பொறுப்பதிகாரி குறித்த சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும் அவரை பொலிஸார் வலைவீசி தேடிவருவதாகவும் கைது செய்து நீதிமன்றில் முன்னலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்கார்களிடம் உறுதிமொழி வழங்கியதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |