வாழைச்சேனை பகுதியில் பேருந்து மீது தாக்குதல் (Photos)
வாழைச்சேனையில் இருந்து மீராவோடை வழியாக அக்கரைப்பற்றை நோக்கி சேவையில் ஈடுபடும் பேருந்து மீது தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது இன்று அதிகாலை(25.09.2023) மட்டக்களப்பு-வாழைச்சேனை பிரதான வீதியில் 18ஆம் கட்டைப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
வாழைச்சேனையில் இருந்து மீராவோடை வழியாக அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்து மீது இனந்தெரியாத நபர்களால் தண்ணீர் போத்தலைக் கொண்டு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக பேருந்தின் கண்ணாடிகள் வெடித்துச் சிதறியுள்ளதுடன், நடத்துனரும் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளார்.

மேலும், தாக்குதலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லையென கூறப்படுகிறது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.




ஈரான் தொடர்பில் துணிச்சலான முடிவெடுத்த ஐரோப்பிய நாடொன்று... விமானங்களை வெளியேற்றிய அமெரிக்கா News Lankasri
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
நிறுத்தாமல் அடிக்கும் ஈரான்... ஆயுதங்கள் பற்றாக்குறையால் தடுமாறவிருக்கும் இஸ்ரேலும் அமெரிக்காவும் News Lankasri