பொதுஜன பெரமுன அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் :கிழித்து வீசப்பட்ட மகிந்த சுவரொட்டிகள் (Photos)
காத்தான்குடி - முகைதீன் பெரிய மெத்தைப் பள்ளிவாயலுக்கு முன்னால் அமைந்துள்ள இலங்கை பொதுஜன பெரமுன அலுவலகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இச்சம்பவமானது இன்று(11) இடம்பெற்றுள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களால் இவ் அலுவலகம் மீது கல்வீச்சுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இலங்கை பொதுஜன பெரமுன காத்தான்குடி செயற்பாட்டாளர் எம்.எம்.நவாஸ் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதல் தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் அளித்த முறைப்பாட்டிற்கமைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், அலுவலகத் தாக்குதலின் போது அங்கு ஒட்டப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் சுவரொட்டிகள் கிழித்து வீசப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri