நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க வீட்டின் மீது தாக்குதல்! (Video)
நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பு போராட்டங்கள் முன்னெடுன்னக்கட்டுள்ளன.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரி வீடுகளும் முற்றுகையிட்டு பொது மக்கள் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அவரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைமைப் பதவியிலிருந்தும் மே முதலாம் திகதி முதல் இராஜினாமா செய்யவுள்ளதாக ரொஷான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள அவர், எதிர்வரும் புத்தாண்டுக்கு முன்னர் விவசாயிகளுக்கு நட்டஈடு மற்றும் உரம் வழங்குமாறு வலியுறுத்தி பதவி விலகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
