கொழும்பில் பொலிஸார் மீது தாக்குதல்! இருவர் படுகாயம்
கொழும்பு தெமட்டகொடையில் இன்று மாலை, போதைப்பொருள் மறைவிடம் ஒன்றில் நடத்தப்பட்ட சோதனையின் போது, இரண்டு பொலிஸார் காயமடைந்தனர்.
இரகசிய தகவல் ஒன்றை அடுத்து, போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில், துணை பொலிஸ் அதிகாரியின் தலைமையில் காவல்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதன்போது, அதிகாரிகள் 10 கிராம் ஹெரோயினுடன் ஒரு ஒருவரை கைது செய்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்டவரின் ஆதரவாளர்கள் குழு பொலிஸாரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் நான்கு பேரை பொலிஸார் கைது செய்தனர்.
சம்பவத்தில் காயமடைந்த இரண்டு பொலிஸாரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மீனா செய்த காரியம், செம கோபத்தில் கோமதியிடம் செந்தில் கூறிய விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam
தங்கத்திற்கான வரிவிலக்கு சலுகையை முடிவுக்கு கொண்டு வந்த சீனா., உலக தங்க விலை நிலவரத்தில் தாக்கம் News Lankasri