தடுப்பூசி செலுத்தச்சென்ற பொது மக்களை அடித்து விரட்டிய பொலிஸார்! வைரலாகும் காணொளி
மாத்தறை – வெலிகம பிரதேசத்தில் தடுப்பூசி செலுத்தும் மத்திய நிலையத்திற்கு வருகை தந்த மக்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரியொருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான காணொளியொன்று சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகின்றது. வெலிகம – கல்பொக்க பகுதியில் நேற்றைய தினம் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்காக பெருமளவிலான மக்கள் சமூகமளித்திருந்தனர்.
எனினும், வருகை தந்த மக்களுக்கு செலுத்துவதற்கு போதுமானளவு தடுப்பூசிகள் இல்லாமையினால், தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.
எனினும், தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்காக வருகை தந்த மக்கள் வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்த நிலையில், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அந்த இடத்திற்கு வருகை தந்த வெலிகம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார், அங்கிருந்த மக்களை வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதன்போது பொது மக்கள் வெளியேறிக்கொண்டிருக்கும் போது மக்கள் மீது பொலிஸ் உயர் அதிகாரியொருவரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.





பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri
