கேப்பாபிலவு அதியுயர் பாதுகாப்பு வலய வீதியால் பயணித்தவர்கள் மீது தாக்குதல்
முல்லைத்தீவு கேப்பாபிலவு படையினரின் முகாமிற்கு முன்னால் செல்லும் மக்களின் பொது போக்குவரத்து வீதி ஊடாக பயணித்தவர்கள் மீது படை அதிகாரி ஒருவர் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குத்தலுக்குள்ளானவர்கள் குறித்த வீதி ஊடாக மோட்டார்சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது பின்னால் வந்த கப் வாகனம் கேப்பாபிலவு படையினரின் படை முகாம் வாயிலை கடந்து 500 மீற்றர் தூரம் வரை மோட்டார்சைக்கிளில் பயணித்தவர்களை மறித்துள்ளனர்.
பின்னர் இரு துப்பாக்கி ஏந்திய படையினர் பாதுகாப்பு கொடுக்க சிவில் உடை தரித்த படை அதிகாரி ஒருவர் மோட்டார்சைக்கிளில் பயணித்தவர்களை அவதூறாக பேசியவாறு தாக்குதல் நடத்தியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் தொடர்பில் கேப்பாபிலவு வாயில் தளத்தில் உள்ள படை பொலிஸாரிடம் முறையிட்டுள்ளனர்.
சிவில் உடைதரித்த படை அதிகாரி எந்த காரணமும் இன்றி உந்துளியில் பயணித்தவர்கள் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் முள்ளியவளை பொலிஸ் நிலையத்திலும் முறையிடவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.





டயானாவின் மரணத்தால் இளவரசர் ஹரிக்கு ஏற்பட்ட அதிர்ச்சி: கண்டுபிடித்த நபர் யார் தெரியுமா? News Lankasri
