சவுதி அரேபிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் - ஈரானின் அதிரடி திட்டங்கள்
சவுதி அரேபியாவில் உள்ள அராம்கோ எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலை, ஈரானிய ஆதரவு ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆளில்லா விமானம் மூலம் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இரண்டு நாட்களுக்கு பின் தொடரும் தாக்குதல்
சவூதி அரேபியா, துருக்கி மற்றும் பாகிஸ்தான் கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டு நாட்களுக்குப் பின்னர் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நேட்டோ பாதுகாப்பு கூட்டணிக்கு இணையான பாதுகாப்பு ஒப்பந்தம், மூன்று நாடுகளில் ஏதாவது ஒன்றில் தாக்குதல் நடத்தினால், அது மூன்று நாடுகளின் மீதான தாக்குதலாகவே கருதப்படும்.
இதேவேளை, செங்கடலையும் ஏடன் வளைகுடாவையும் இணைக்கும் பாப் அல் மாண்டேப் நீரிணைக்கு அருகில் அமைந்துள்ள மொகா துறைமுகமும் ஹவுதிகளின் தாக்குதல்களால் பெருமளவு சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.