யாழ். வடமராட்சியில் மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் மது போதையில் வீடொன்றில் உள்நுழைந்து நபர் ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த தாக்குதல் சம்பவமானது நேற்று (30.10.2024) இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, தனது குழந்தை, மனைவியுடன் வீட்டில் இருந்த வேளை மதுபோதையில் நபரொருவர் அத்துமீறி உள்நுழைந்து தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்ததுடன் குடும்பஸ்தரின் மனைவி, பிள்ளைக்கும் கத்தியால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
இந்நிலையில், வீட்டிற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள குறித்த குடும்பஸ்தரின் மோட்டார் சைக்கிளின் மீது கத்தியால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் தெரிவித்துள்ளார்.

எனினும், கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற நபர் இறுதியாக மோட்டார் சைக்கிள் மீது கத்தியால் தாக்குதல் மேற்கொண்டு விட்டுச் சென்றது ஒரு வித அச்சத்தை ஏற்படுத்துவதால், உடனடியாக அவரை கைது செய்யுமாறு குறித்த குடும்பஸ்தர் பொலிஸாரை கேட்டுக் கொண்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 5 நாட்கள் முன்
அமெரிக்காவால் வெனிசுலாவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி: கச்சா எண்ணெய் ஏற்றுமதி 75% வீழ்ச்சி News Lankasri
இரவில் உக்ரைன் மீது படையெடுத்த 200க்கும் மேற்பட்ட ரஷ்ய ட்ரோன்கள்: சுட்டு வீழ்த்த போராடிய வீரர்கள் News Lankasri
சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை கோமதி பிரியா நடிக்க வருவதற்கு முன் எப்படி இருந்தார் பாருங்க.. புகைப்படம் இதோ Cineulagam