மொட்டுக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினருக்கு அழுகிய முட்டை தாக்குதல்
மொட்டுக் கட்சியின் பெண் உள்ளூராட்சி மன்று உறுப்பினர் ஒருவருக்கு அழுகிய முட்டைகளை வீசித் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அநுராதபுரம் உள்ளூராட்சிமன்ற பெண் உறுப்பினரான சுரங்கி ரேணுகா என்பவரே இவ்வாறு தாக்கப்பட்டுள்ளார்.
அழுகிய முட்டைகளால் தாக்குதல்
கடந்த செவ்வாய்க்கிழமை நகரசபைத் தலைவர் சோமதாச தலைமையில் நடைபெற்ற நகரசபை கூட்டத்தின் போது நகர சபை ஆணையாளர் ருவன் விஜேதுங்கவை குறித்த பெண் உறுப்பினர் செருப்பால் அடித்து அவமானப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து நேற்று அவர் சபை அலுவலகத்துக்கு வந்திருந்த நிலையில் நகர சபை உறுப்பினர்கள் அவரை பலவந்தமாக வெளியே தூக்கி வந்து அழுகிய முட்டைகளால் தாக்கி , கழிவு நீரை ஊற்றி அவமானப்படுத்தியுள்ளனர்.
கடைசியில் அநுராதபுரம் பொலிஸார் தலையிட்டு சுரங்கி ரேணுகாவை மீட்டு அவ்விடத்திலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்