பிரபல தொலைக்காட்சி ஊடகவியலாளர் மீது தாக்குதல் - நீதிபதி வழங்கிய உத்தரவு
பிரபல தனியார் தொலைக்காட்சி ஊடகவியலாளரை கடுமையாக தாக்கிய நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறு கல்கிஸ்ஸ மேலதிக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊடகவியலாளர் ஜானக கோம்ஸ் கடுமையாக தாக்கிய நபரை அணிவகுப்பு உட்படுத்துவதுடன், எதிர்வரும் நவம்பர் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மேலதிக நீதவான் சஞ்சய் எல்.எம் விஜேசிங்க உத்தரவிட்டுள்ளார்.
சந்தேக நபருக்கு விளக்க மறியல்
பிலியந்தலை வேவல பிரதேசத்தைச் சேர்ந்த தித்தெனியகே தஹாம் வீரக்கொடி என்ற நபரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இரத்மலானை காலி வீதி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர் தனது கட்சிக்காரரை வழிமறித்து தாக்கியுள்ளார்.
சட்டத்தரணிகள் கோரிக்கை
ஊடகவியலாளர் என்பதால் இந்த சம்பவத்தின் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளார்களா என்பது தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என வழக்கு தாக்கல் செய்தவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளான வருண ஜயசிங்க, அஜித் நந்த குமார, கீத்ம பெர்னாண்டோ உள்ளிட்ட குழுவினர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சந்தேகநபர் சார்பில் ஆஜராக சட்டத்தரணிகள் மறுத்ததுடன், எந்தவொரு சட்டத்தரணியும் ஆஜராகவில்லை என்பது குறிப்பித்தக்கது.