யாழ்.அனலைதீவில் கனேடிய தமிழ் குடும்பத்திற்கு நேர்ந்த கதி
யாழ்.அனலைதீவில் கனேடிய தமிழ் குடும்பம் மீது வன்முறை கும்பல் வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளதுடன், பெருமளவு வெளிநாட்டு நாயணம் மற்றும் பொருட்கள், நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
கனடாவில் வசிக்கும் குடும்பம் ஒன்று தமது பூர்வீக வீட்டினை புனரமைக்கும் நோக்குடன் கணவன், மனைவி இருவரும் அனலைதீவில் தமது வீட்டில் தங்கியிருந்து புனரமைப்பு வேலைகளை முன்னெடுத்து வந்துள்ளனர்.

வாள் வெட்டு தாக்குதல்
இந்நிலையில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நள்ளிரவு அவர்களின் வீட்டினுள் நுழைந்த நால்வர் அடங்கிய முக மூடி கொள்ளை கும்பல் தம்பதியினர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு 3 ஆயிரம் அமெரிக்க டொலர், கடவுச்சீட்டுக்கள் , உள்ளிட்ட உடமைகளை கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த தம்பதியினர் படகு மூலம் ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை கடற்படையினரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Bigg Boss: உங்க வீட்டுல இப்படியா வளர்த்திருப்பான் உன்னையெல்லாம்? தரையில் அமர்ந்து வெடித்த விஜய் சேதுபதி Manithan