லண்டன் ஈஸ்ட் ஹாம் பகுதி இலங்கை முஸ்லிம்கள் செல்லும் நிலையத்தின் மீது தாக்குதல்! பொலிஸார் தீவிர விசாரணை
கிழக்கு லண்டனில் - ஈஸ்ட் ஹாம் பகுதியில் 15 பேர் கொண்ட குண்டர்கள் குழு மேற்கொண்ட தாக்குதலில் இரு இலங்கையர்கள் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போத்தல்கள் மற்றும் ஹொக்கி மட்டைகளை ஏந்திய குண்டர்கள் குழுவொன்று இந்த தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்ட் ஹாமில் உள்ள இலங்கை முஸ்லிம் நிலையம் இப்தார் சாப்பிடச் சென்றவர்களை இந்தக் குழு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிழமை இரவு 9 மணியளவில் பார்கிங் வீதி மசூதிக்கு வெளியே ஹொக்கி மட்டைகள், பீர் பாட்டில்கள், ஃப்ளோரசன்ட் லைட் டியூப்கள் மற்றும் கற்களுடன் ஆயுதம் ஏந்திய சுமார் 15 ஐரோப்பிய ஆண்கள் இருந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இதன் போது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் கண்ணாடி உடைந்ததில் இருவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையர்களுக்கு சொந்தமான ஆவணங்கள் சிலவற்றையும் இந்த கும்பல் தீ வைத்து எரித்துள்ளனர்.
இதனால் முக்கியமான ஆவணங்களை அவர்கள் இழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வரும் முன்னதாக சந்தேகநபர்கள் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.
அதிகாரிகள் அப்பகுதியில் சோதனை நடத்திய போதிலும், சந்தேக நபர்களின் தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. அங்குள்ள சீசீடீவி காணொளியின் உதவியுடன் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
You My Like This Video

43 வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாமல் இருக்கும் அனுஷ்கா.. காதலனை பற்றி முதல் முறையாக கூறிய நடிகை Cineulagam

திருமணத்திற்கு 1 மாதம் முன் தெரியவந்த அதிர்ச்சி விஷயம்.. முதல் மனைவி பற்றி விஷ்ணு விஷால் எமோஷ்னல் Cineulagam

கடலுக்கு அடியில் மிகப்பெரிய ஜாக்பாட்டை கண்டுபிடித்த இந்தியாவின் நட்பு நாடு.., ஆனால் ஒரு சிக்கல் News Lankasri
