திருமண கோரிக்கையை நிராகரித்த சிறுமி! - இளைஞர் ஒருவரின் மிக மோசமான செயல்
16 வயதான சிறுமியை கூர்மையான ஆயுதங்களால் தாக்கி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் 26 வயது இளைஞரைக் கைது செய்ய தம்புளை பொலிஸார் சிறப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
தம்புள்ளை- பன்னம்பிட்டிய , மெனிக்தென்ன பிரதேசத்தில் உள்ள தனது வீட்டில் வைத்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சிறுமி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெற்றோரை இழந்த குறித்த சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பலத்த காயங்களுடன் தம்புளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
தாக்குதலை மேற்கொண்டவர் மாத்தளை- மஹவெல பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும், பதுளை பிரதேசத்தில் வீதி அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுபவரென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் சிறுமி ஒரு விரலை இழந்துள்ளதாகவும், அவரது முதுகு மற்றும் கழுத்தில் பலத்த வெட்டுக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காயமடைந்த சிறுமியின் கிராமத்திலுள்ள வீடொன்றில் நடைபெற்ற நிகழ்வொன்றுக்காக சிறுமி சென்ற போது, சந்தேகநபர் சிறுமியிடம் திருமணம் செய்துகொள்வதற்கான யோசனையை தெரிவித்துள்ளார்.
எனினும் அச்சிறுமி அந்த யோசனையை நிராகரித்தமையே இச்சம்பவத்துக்கான காரணம் என சிறுமியின் பாட்டி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட இளைஞர் தலைமறைவாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், அவரை கைது செய்ய பொலிஸார் விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
