கிளிநொச்சியில் வெண் ஈ நோய்த் தாக்கத்தினால் பாதிப்புறும் விவசாயிகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் பரவலாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் வெண் ஈ நோய்த் தாக்கம் வேகமாக பரவி வருகிறது அவதானிக்கப்பட்டுள்ளது.
வளர்ந்த பல ஆண்டுகள் வயதினை கொண்ட தென்னைகள் முதல் காய்க்கும் பருவத்தில் உள்ள தென்னைகள் வரை இந்நோய்தாக்கம் வேகமாக பரவி வருவதாக தென்னை பயிர்செய்கையாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நோய் பரவல் காரணமாக தென்னைகளின் ஓலைகள் காய்ந்து தென்னைகள் அழிந்து போகும் நிலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அழிந்து போகும் நிலை
மேலும். பெருமளவு தென்னைகளை கொண்டுள்ள கிளிநொச்சி மாவட்டத்தில் வெண் ஈ நோய்த்தாக்கம் காரணமாக பெரும் அனர்த்தம் ஏற்பட்டு தென்னைகள் முழுமையாக அழிந்து போகும் நிலை ஏற்படும் தென்னந்தோப்பு உரிமையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்நிலையில், நோயை கட்டுப்படுத்துவதற்கு வழி தெரியாதுள்ளதாகவும் தினமும் தென்னைகளை பார்த்து கண்ணீரை விடுவதனை தவிர வேறு வழியில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |