குவைத்தில் சூழ்ந்துள்ள கரும்புகை! பெரும் அச்சத்தில் மக்கள்
மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், குவைத் தலைநகரில் அமெரிக்க தூதரகம் அருகே நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் குவைத்தில் கரும்புகை சூழ்ந்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
நீடிக்கும் போர் பதற்றத்தினால் பணவீக்கத்தில் பெரும் தாக்கம்! எண்ணெய் மற்றும் எரிவாயு விலையில் ஏற்படவுள்ள மாற்றம்
குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை
குவைத்தில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தனது குடிமக்களுக்கு அவசர எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.

தூதரகப் பகுதிக்கு யாரும் வர வேண்டாம் என்றும், அனைவரும் அவரவர் வீடுகளிலேயே பாதுகாப்பாக தஞ்சம் புகுந்து கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் மீது ஈரான் நடத்தி வரும் தாக்குதல்களின் ஒரு பகுதியாகவே இது பார்க்கப்படுகிறது.
ஏவுகணைகளை இடைமறித்து அழித்த குவைத்
குவைத்தில் நேற்று ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இன்று இந்தத் தாக்குதல் அச்சுறுத்தல் எழுந்துள்ளது.
அமெரிக்காவின் முக்கிய நட்பு நாடான குவைத்தில் அமெரிக்க இராணுவத் தளம் ஒன்று உள்ளது. தங்களை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை இடைமறித்து அழித்துள்ளதாக குவைத் அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், நகரின் பல பகுதிகளில் புகைப் மண்டலம் காணப்படுவது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri