லண்டனில் இளைஞனின் வெறிச்செயல் - சிறுமி உட்பட 5 பேர் பலி
தெற்கு லண்டன் Plymouth நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் சிறுமி உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
நேற்றிரவு 23 வயதான இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. பத்து வயதான சிறுமி, மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கி சூடு நடத்திய நபரின் உடலும் சூட்டுக் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நீண்ட துப்பாக்கியுடன் காணப்பட்ட இளைஞன் தனது குடும்பத்தவர்களை யும் எதிர்ப்பட்டவர்களையும் கண்டபடி சுட்டுள்ளார் என்று முதலில் வெளியான தகவல்கள் தெரிவித்தன.
பாரம் தூக்கும் வாகனம் ஒன்றின் சாரதி எனக் கூறப் படும் அந்த இளைஞன், முதலில் வீட்டின் கதவை உடைத்து அங்கிருந்தவர்களைச் சுட்டுவிட்டு வெளியே வந்து வழிப்போக்கர்களையும் தாக்கியுள்ளார். காயமடைந்த சிலர் அம்புலன்ஸ் ஹெலிகொப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.
இதுவொரு பயங்கரவாத தாக்குதல் இல்லையென முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வரவேற்கிறோம்... பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணையும் திட்டத்துக்கு மேக்ரான் வரவேற்பு News Lankasri
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam