கடுமையாக தாக்கப்பட்டுள்ள பேராதனை பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர்!
பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியருமான அதுல சேனாரத்ன மற்றும் அவரது மகன் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் பல்கலைக்கழக மாணவர்கள் எனக்கூறப்படும் இனந்தெரியாத குழுவொன்றினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உத்தியோகபூர்வ இல்லம் சேதம்
பேராசிரியர், பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்தபோதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
குறித்த குழுவினர் பேராசிரியர் தங்கியிருந்த இல்லத்தையும் தாக்கி சேதப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்ற பேராதனை பொலிஸார் தாக்குதலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
விசாரணையில் வெளிவந்த தகவல்
இதனைதொடர்ந்து காயமடைந்திருந்த பேராசிரியரை சிகிச்சைக்காக பேராதனை வைத்தியசாலையிலும் அவரது மகனை கண்டி வைத்தியசாலையிலும் அனுமதித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவர் குழுவொன்றுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேராதனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri

Brain Teaser Maths: நீங்கள் இடது மூளை புத்திசாலி என்றால் இந்த விநாக்குறியில் வரும் விடை என்ன? Manithan

இந்த ராசியினர் மருமகளை மகளாகவே நடத்தும் தலைசிறந்த மாமியாராக இருப்பார்களாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
