அமெரிக்காவில் கொடூரம்! மூவரை பலி எடுத்த துப்பாக்கி சூடு
அமொிக்காவின் மிச்சிக்கன் பிராந்தியத்தில் நேற்று பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் சில மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
The Detroit Free Press என்ற செய்தித்தாள் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை ஒன்றில், 15 வயது மாணவன் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டதுடன், ஆசிரியர் ஒருவர் உட்பட்ட 7 பேர் காயமடைந்தனர்.
இந்தநிலையிலேயே தாக்குதல் இடம்பெறலாம் என்ற வதந்தி பரவியதை அடுத்து சில மாணவர்கள் நேற்று பாடசாலைக்கு செல்லவில்லை என்று அந்த செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
மாணவர் ஒருவரின் தந்தையான Jody Job தமது மகன் வகுப்பில் ஏதோ நடக்கப்போகிறது என்று உணர்ந்த நிலையில் வகுப்புக்கு செல்லவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
தமது மகனும் பாதுகாப்பு கரிசனைக் காரணமாக வகுப்புக்கு செல்லவில்லை என்று Robin Redding என்று தந்தை தெரிவித்துள்ளார்.
தமக்கு வகுப்புக்கு செல்வது சௌகரியமாக இல்லை என்று கூறி தமது மகளும் நேற்று செல்லவில்லை என்று மாணவி ஒருவரின் தாய் ஒருவரும் கூறியுள்ளதாக The Detroit Free Press தெரிவித்துள்ளது.
இதேவேளை கோவிட் முடக்கத்துக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டில் மாத்திரம் அமொிக்காவில் 138 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியுடன் மற்றும் பல செய்திகளை இணைத்து வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam