வானிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தகவல்!
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டல குழப்ப நிலை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கையை அண்மித்த பகுதிகளில் குறைந்த வளிமண்டல குழப்ப நிலைகாரணமாக நாட்டில் இன்று முதல் அடுத்த சில நாட்களில் நாட்டில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை

வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பிற இடங்களில் பிற்பகல் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் வடக்கு, கிழக்கு, மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
முன்னெச்சரிக்கை
இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.