கொழும்பில் அழைப்பிதழினால் வந்த உயிராபத்து - சமூக வலைத்தளங்களில் பரவும் படங்கள்
கொழும்பின் புறநகர் பகுதியான அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் அமைந்துள்ள அழகு கலை நிலையத்தை திறப்பதற்கு கிளப் வசந்த எனப்படும் சுரேந்திர வசந்த பெரேராவிற்கு கிடைத்த அழைப்பிதல் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
சுரேந்திர வசந்த பெரேராவிற்கு அழகு கலை நிலையத்தை திறப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கமைய இன்று காலை அத்துருகிரிய, ஒருவல பிரதேசத்தில் அமைந்துள்ள அழகு கலை நிலையத்தை திறப்பதற்காக சுரேந்திர வசந்த பெரேரா தனது மனைவியுடன் சென்றுள்ளார்.
இதன்போது துப்பாக்கியை ஏந்திய இருவர் அழகு கலை நிலையத்திற்கு வந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
அழைப்பிதழ்
துப்பாக்கிச்சூடு நடத்தியவர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த சுரேந்திர வசந்த பெரேரா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் அழைப்பிதழ்களை பெற்ற ஏனையவர்கள் காயமடைந்துள்ளனர்.
மனைவியும் சுடப்பட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். காயமடைந்தவர்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் பாடகி கே சுஜீவாவும் கலந்து கொண்டதுடன் அவரும் காயமடைந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
காயமடைந்த மேலும் இரு பெண்கள் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.







பிரித்தானியாவில் மாணவர்களின் தலைகளை கழிப்பறையில் திணித்து: வெளிச்சத்திற்கு வந்த கொடூரம் News Lankasri

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan

ஜீ தமிழின் நினைத்தாலே இனிக்கும் சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... புகைப்படங்கள் இதோ Cineulagam

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan
