கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அத்துரலியே ரத்தன தேரர்! - எம்.பி பதவியில் இருந்தும் நீக்குமாறு கோரிக்கை
தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் (Athuraliye Rathana Thero), எமது மக்கள் சக்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அந்த கட்சியின் அரசியல் சபை மற்றும் மத்திய செயற்குழு என்பன இணைந்து இந்த தீர்மானத்தை எடுத்துள்ளன.
அத்துரலியே ரத்தன தேரருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள நான்கு குற்றச்சாட்டுக்களுக்கு அவர் குற்றவாளி என தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, அவரை கட்சியில் இருந்து நீக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
கட்சியின் இந்த தீர்மானம் குறித்த கடிதம் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
எமது மக்கள் சக்தி கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ள அத்துரலியே ரதன தேரரை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்தும் நீக்குமாறு அந்த கட்சி, தேர்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது.
சிங்கள இனமயமாக்கலை எதிர்கொள்ளும் ஈழத்தமிழினம் 2 நாட்கள் முன்
சன் டிவி சீரியல்களின் நேரம் மாற்றம்.. சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, எதிர்நீச்சல் ஒளிபரப்பு எப்போது தெரியுமா? Cineulagam
நீங்கள் சிரிக்கவே மாட்டீர்களா? பெண் செய்தியாளரை பார்த்து டிரம்ப் கேட்ட கேள்வி: வெடித்த புதிய சர்ச்சை News Lankasri