அத்துரலியே ரத்தன தேரர் நீதிமன்றத்தில் முன்னிலை
புதிய இணைப்பு
நுகேகொடை நீதிமன்றத்தில் முன்னிலையான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலியே ரத்தன தேரருக்கு விளக்கமறில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
நீதிமன்றத்திலிருந்து பிடியாணை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர், இன்று (29) காலை நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து நுகேகொட நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிடியாணை பிறப்பித்திருந்த நிலையில் குறித்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரரை கொழும்பு குற்றப்பிரிவு அதிகாரிகள் கடந்த காலங்களில் தற்போது தேடி வந்தனர்.
தேசியப் பட்டியல்
அவரை தேடி கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள சுமார் 10 இடங்களில் சோதனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதில் பல விகாரைகள் மற்றும் வீடுகள் அடங்கும் என்று கூறப்பட்டது.
தேடப்பட்ட இடங்களில் தேரர் வந்ததற்கான எந்த தகவலும் இல்லாததால், அவர் நாட்டை விட்டு தப்பிச் செல்வதை தடுக்க சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
2020 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற்றதற்காக, அபே ஜன பல கட்சியின் பொதுச் செயலாளர் வேதினிகம விமலதிஸ்ஸ தேரரை கடத்தி, அவரை அச்சுறுத்தியமை தொடர்பில் அத்துரலியே ரத்தன தேரர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கடந்த காலங்களில் தடைப்பட்ட இந்த விசாரணை, கொழும்பு குற்றப் பிரிவின் புதிய இயக்குநராக மூத்த பொலிஸ் கண்காணிப்பாளர் இந்திக லொக்குஹெட்டி நியமிக்கப்பட்டதன் பின்னர் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



