அமெரிக்காவில் ரயில் நிலையத்தில் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு! ஐவர் பலி - 16 பேர் படுகாயம்
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் உள்ள புரூக்ளின் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையில் பயணிகள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஐவர் உயிரிழந்துள்ளதாகவும், 16 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி 08:30 மணிக்கு (12:30 GMT) சன்செட் பூங்காவில் உள்ள 36வது தெரு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் ரயில் நிலையத்தை விட்டு தப்பியோடி விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாட்சிகளின்படி, சந்தேகநபர் ஆரஞ்சு நிற உடை மற்றும் முகமூடியை அணிந்திருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கூட்டத்தை திசை திருப்ப ஒரு புகை குண்டை வீசினார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. காயமடைந்தவர்கள் சிகிச்சைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலுக்கான காரணம் எதுவும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை. மக்கள் அப்பகுதியை விட்டு விலகி இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
எவ்வாறாயினும், இது தீவிரவாத தாக்குதலாக இருக்க கூடும் என சந்தேகிக்கப்படும் நிலையில் அது குறித்து பொலிஸார் உறுதிபடுத்தவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

நாளை என்ன நடக்கும்..! அச்சத்தில் இலங்கை மக்கள் 2 நாட்கள் முன்

விஜய், அஜித், விக்ரம் என முவரும் நிராகரித்த திரைப்படம் ! சூர்யா நடிப்பில் வெளியாகி பிளாக் பஸ்டர் ஆன கதை.. Cineulagam

சொந்த ஊரில் இருக்கும் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தியின் அழகிய வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ பாருங்கள் Cineulagam

விக்ரம் படத்திற்கு போட்டியாக களமிறங்கிய பாலிவுட் திரையுலகம் ! அவர்களும் செய்யவுள்ள விஷயம்.. Cineulagam
