நாடு முழுவதிலும், நோய் அறிகுறியற்ற பெரும் எண்ணிக்கையிலான தொற்று உறுதியாளர்கள்
நாடு முழுவதிலும் நோய் அறிகுறியற்ற பெரும் எண்ணிக்கையிலான தொற்று உறுதியாளர்கள் உள்ளனர் சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
நாளாந்த தொற்று உறுதியாளர் எண்ணிக்கை குறைந்த எண்ணிக்கையில் பதிவான போதிலும், நோய் அறிகுறியற்ற பெரும் எண்ணிக்கையிலான தொற்று உறுதியாளர்கள் நாடு முழுவதிலும் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தெற்கு ஊடகமொன்றுக்கு அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும், அனைவரும் சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் மரணங்களின் எண்ணிக்கை குறைவாக பதிவாகின்றது எனவும், 60 வயதுக்கும் மேற்பட்டவர்களே அதிகளவில் உயிரிழப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டு காலத்தில் அனைவரும் சுகாதார பழக்க வழக்கங்களை பின்பற்ற வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

புது பாய்பிரென்ட் உடன் சமந்தா வெளியிட்ட ஸ்டில்கள்.. காதல் கிசுகிசுவுக்கு நடுவில் வைரலாகும் புகைப்படங்கள் Cineulagam

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
