கொட்டும் மழையிலும் நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள்: முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு(Video)
அஸ்வெசும நலன்புரி நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொட்டும் மழையினையும் பொருட்படுத்தாது நீண்ட வரிசையில் காத்திருந்துள்ளனர்.
நுவரெலியா - நோர்வூட் நிவ்வெளிகம பகுதியில் உள்ள பிரதேச செயலகத்திற்கு முன்னால் நேற்று(20.06.2023) அஸ்வெசும நலன்புரி நன்மைகளை பெற்றுக்கொள்வதற்காக பிரதேச மக்கள் இவ்வாறு காத்திருத்துள்ளனர்.
அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு பெற்றுக்கொள்ளவுள்ள முதலாவதாக தெரிவு செய்யப்பட்ட மக்களின் வங்கி கணக்கினை ஆரம்பிப்பதற்கான கடிதங்களை பெற்றுக்கொள்வதற்காகவே மக்கள் இவ்வாறு கூடியுள்ளனர்.
சுமார் 3000த்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் இவ்வாறு கூடியதன் காரணமாக அங்கு பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளது.
குற்றம் சாட்டிய பொதுமக்கள்

இதனால் குறித்த அலுவலகத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு, வரிசையினை நெறிப்படுத்துவதற்கான செயற்பாடுகளில் திணைக்கள உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் சமூக சேவையாளர்கள் ஈடுப்பட்டிருந்தனர்.
குறித்த நலன்புரி நன்மைகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான நடைமுறை பின்பற்றபடவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டிய போதிலும் இந்த ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் வரவேண்டிய நாட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதனை அறியாமல் பலரும் வருகை தந்ததன் காரணமாக இவ்வாறு நெரிசல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அலுவலர் ஒருவர் தெரிவித்தார்.
இதற்கமைய அம்பகமுவ செயலகத்திற்கு உட்பட்ட ஹட்டன் தெற்கு ரூவன்புர ஹட்டன் மேற்கு பிரிவுகளை சேர்ந்தவர்கள் 20 ம் திகதியும், நோர்வூட் செயலகத்திற்கு உட்பட்ட பிரதேசத்தை சேர்ந்த மொக்கா பொகவான பகுதியை சேர்ந்தவர்கள் 20 ம் திகதியும், வனராஜா ஹட்டன் வடக்கு, டிக்கோயா தெற்கு, ஸ்ட்ரப்பி, ஓல்டன் பகுதியை சேர்ந்தவர்கள் 21ம் திகதியும், வெளிஓயா, லெதன்டி, பிரவுன்சிக், பொகவந்தலாவை பகுதியைச் சேர்ந்தவர்கள் 24ம் திகதியும் வருகைத்தரும்படி கூறப்பட்டுள்ளது.
மேலும், வெஞ்சர், பன்மூர் நிவ்வெலிகம, இன்ஜஸ்ரி, டிலரி மஸ்கெலியா ஆகிய பகுதியைச் சேர்ந்தவர்கள் 25ம் திகதியும், டிக்கோயா, ஹட்டன் கிழக்கு, ஹட்டன் வடக்கு, கெர்கஸ்வோல்ட், மறே பகுதியை சேர்ந்தவர்கள் 26 ம் திகதியும், மவுசாக்கலை, ரொசல்ல, செனன், சீத்தாகங்குல, கவரவில மாநெலு பகுதியை சேர்ந்தவர்கள் 27ம் திகதியும், நோர்வூட், என்பீல்ட், கொட்டியாகல, லொய்னொன் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் 28 ம் திகதியும் அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை எவ்வித நிரந்தர தொழிலும் இன்றி நாட்கூலிக்கு ஈடுபடும் பல குடும்பங்களுக்கு அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கிடைக்கவில்லை என்றும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களில் பல குடும்பங்களுக்கு தொழில் இருந்தும் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் நகர் புற பகுதிகளில் வசிக்கும் பல குடும்பங்கள் இந்த அஸ்வெசும நலன்புரி நிவாரணம் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் பல்வேறு குற்றசாட்டுக்கள் மக்களால் முன்வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 12 மணி நேரம் முன்
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ரோஹினியால் பாத்ரூமில் மறைந்து கதறும் மனோஜ், விஜயாவிற்கு ஷாக் கொடுத்த மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam