அஸ்வெசும வேலைத்திட்டத்தை ஆரம்பித்ததற்கான காரணத்தை வெளியிட்ட ஜனாதிபதி
நாம் வழங்கும் சலுகைகள் போதுமானவை அல்லவெனவும், பொருத்தமானவர்களுக்கு சலுகைகள் சென்றடைய வேண்டும் எனவும் உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் வலியுறுத்தியதன்படியே நாம் அஸ்வெசும வேலைத்திட்டத்தை ஆரம்பித்தோம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘இலங்கையில் உள்ள நுண், சிறு, நடுத்தர நிறுவனங்களின் ஆற்றலுடன் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் தீர்மானமிக்க முயற்சி’ என்ற வேலைத் திட்டத்தில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
18 இலட்சம் பயனாளிகள் எண்ணிக்கையை 24 இலட்சமாக அதிகரித்திருக்கிறோம். குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான முதன்மைத் திட்டமாகவே அதனை செயற்படுத்தினோம்.
குறைந்த வருமானம் ஈட்டுவோருக்கு நிவாரணம் வழங்குவதற்கான முதன்மைத் திட்டமாகவே அதனை செயற்படுத்தினோம்.
20 இலட்சம் நில உரிமையாளர்கள்
எமது வங்கிக் கட்டமைப்பைப் பாதுகாத்து பாரிய வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டுச் செல்லும் அதேநேரம் சிறு, நடுத்தர வர்த்தகர்களை வலுவூட்டும் வகையில் இருபது இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்க ‘உறுமய’ திட்டத்தை செயற்படுத்தினோம்.
இந்த திட்டத்தை நிறைவு செய்ய மூன்று முதல் நான்கு ஆண்டுகள் ஆகலாம். இதன் மூலம் 20 இலட்சம் நில உரிமையாளர்கள் உருவாக்கப்படுவர். அதேபோல் 200,000 பேருக்கு வீட்டு உரிமையையும் வழங்க ஆரம்பித்துள்ளோம்.
பெருந்தோட்டங்கள் கிராமங்களாக பிரகடனப்படுத்தப்படவுள்ளன. அதற்காகவும் காணி மற்றும் வீட்டு உரிமைகளை வழங்குகின்றோம். இதன் கீழ், 20 – 25 லட்சம் பேருக்கு புதிய உரிமை கிடைக்கும். இவ்வாநு மக்களுக்கு உரிமையை உறுதிப்படுத்த பாடுபடுகிறோம்.
மாதாந்த உதவித்தொகை
முதன்முறையாக, சாதாரண மக்களுக்கு உரிமைகளை வழங்கும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறோம். இவற்றில் விவசாய நிலங்களும் உள்ளன.
ஆனால் விவசாய கிராமங்களிலேயே வறுமை நிலவுகிறது. அதற்குத் தீர்வாகவே விவசாய நவீனமயமாக்கலை கிராமத்திற்கு கொண்டு செல்கிறோம்.
இதன் மூலம் கிராமப் புறங்களில் பணப் புழக்கம் அதிகரிக்கிறது. உரிமையும் உறுதி செய்யப்படும். வங்கிக் கணக்குகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். தனி நபர் பணப் பெறுமதி அதிகரிக்கும். இந்த முயற்சிகளுக்கு இணையாக சிறு, நடுத்தர வர்த்தகர்களுடன் முன்னேற்றத்திற்கும் வழி ஏற்படுத்திக்கொண்டு முன்னோக்கிச் செல்ல வேண்டியது அவசியமாகும்.
தற்போதுள்ள கட்டமைப்பிற்குள் இந்தச் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |