ஜேர்மனியிலுள்ள யூத வழிபாட்டு தலத்தின் மீது திடீர் தாக்குதல்
ஜேர்மனி நாட்டின் பெர்லின் நகர் மையத்திலுள்ள யூத வழிபாட்டு தலத்தில் திடீர் தாக்குதல் சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
குறித்த வழிபாட்டு தலத்திற்குள் மர்மநபர்கள் சிலர் நள்ளிரவில் அத்துமீறி நுழைந்துள்ளதோடு அவர்கள் வெடிக்கும் தன்மை உடைய பொருட்களை வீசிவிட்டு தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் நடவடிக்கை
இந்நிலையில், பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அயடுத்து, பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆலயத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
பின்னர் தப்பியோடிய மர்மநபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவம் காரணமாக வழிபாட்டு தலத்தை சுற்றி வசித்து வரும் மக்கள் அச்சத்தில் உள்ளதோடு, ஜேர்மனி பிரதமர் ஓலாப் ஸ்கோல்ஸ் இந்த தாக்குதலை கடுமையாக கண்டித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், புகழ்பெற்ற இந்த வழிப்பாட்டு தலம் சார்பில் பள்ளி- கல்லூரிகள், தங்கும் விடுதிகள் ஆகியவை அங்கு நிர்வகிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.