அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள அறிக்கை
மூவரடங்கிய குழுவின் அறிக்கையை அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளது.
சுகாதாரத்துறையில் நிலவும் குறைபாடுகள் மற்றும் வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்க பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்த போதே இந்த அறிக்கை கையளிக்கப்பட்டது.
மருத்துத் தட்டுப்பாட்டினால் ஏற்பட்டுள்ள சிரமம்
இந்த நிலையில், சுகாதார அமைச்சு, மருத்துவ விநியோகப் பிரிவு, அரச மருந்துக் கூட்டுத்தாபனம், அரச மருந்து உற்பத்திக் கூட்டுத்தாபனம் மற்றும் தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகாரசபை ஆகியவற்றுக்கு இடையேயான ஒருங்கிணைப்பில் உள்ள குறைபாடுகள் இந்த நிலைமைக்கு காரணமாகும்.
எனவே, சுகாதார அமைச்சினால் ஒருங்கிணைப்புக் குழுவொன்றை நியமித்து, மாதாந்த முன்னேற்ற மீளாய்வைப் பெற்றுக்கொள்ளுமாறும் அறிக்கை பரிந்துரைத்துள்ளது.
மருந்துத் தட்டுப்பாடு மற்றும் மருந்துப் பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களைத் தீர்ப்பதற்கான அவசர முறைமையின் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இதன்போது வலியுறுத்தினார்.
புற்றுநோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மருந்து
மருந்துகள் உட்பட சுகாதாரத் துறையின் ஏனைய தேவைகள் குறித்து உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
கணக்காய்வாளர் நாயகத்தின் பரிந்துரைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமையால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக, தொழில்நுட்பக் குழுவொன்றை நியமிக்கவும் குழுவின் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தின் மருந்துகளுக்கான செலவில் கிட்டத்தட்ட 40% புற்றுநோயாளிகளுக்கான மருந்துகளை வழங்குவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
புற்று நோயாளர்களுக்கான மருந்துகள் மற்றும் இன்சுலின் தட்டுப்பாடு
காணப்படுவதாகவும், இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க
வேண்டும் எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கப் பிரதிநிதிகள்
சுட்டிக்காட்டினர்.