தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறை சட்டத்தரணிகளால் நிறுவப்பட்டுள்ள பிரித்தானிய தமிழ் சட்டத்தரணிகள் சங்கம்
பிரித்தானிய தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் (“ABTL”) எதிர்வரும் 31ஆம் திகதி( ஜனவரி) அங்குரார்பன நிகழ்வை நடத்துகிறது. தமிழ் பாரம்பரிய மாதத்தை நிறைவு செய்யும் இணைய நிகழ்வுடன் இது இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ABTL என்ற பிரித்தானிய தமிழ் சட்டத்தரணிகள் சங்கம், இலாப நோக்கமற்ற உறுப்பினர்களின் சங்கமாக, தமிழ் சமூகத்தின் இளம் தலைமுறை சட்டத்தரணிகளால் நிறுவப்பட்டுள்ளது.
ஆர்வமுள்ள சட்டத்தரணிகள், சட்டத் தொழிலில் பிரவேசிப்பதை ஊக்குவித்தல், சட்டத் துறையில் அதிக பன்முகத்தன்மை மற்றும் உள்ளடக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை வழங்குதல் மற்றும் இங்கிலாந்துக்கு அப்பால் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளை இணைக்க உதவுதல் போன்ற பணிகளை இது மேற்கொள்கிறது.
இந்த அமைப்பின் பிரதானிகளான கலாநிதி எஸ் செல்வன் இந்த அமைப்பின் செயற்குழு தலைவராக செயற்படுகிறார். இவர் உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சட்ட நிபுணர் மற்றும் அகதிகள் மற்றும் மனித உரிமைகள் குறித்த ஆலோசகராக செயற்பட்டு வருகிறார்.
திருமதி வசந்தி செல்வரத்தினம், பரந்த அளவிலான தொழில் துறைகளில் ஆலோசகர் மற்றும் நடுவராகப் பணியாற்றி வருகிறார். அத்துடன் கமல் அருள்வேல், அருள்வேல் ரீட் ஸ்மித் எல்எல்பியின் நிதித் தொழில் குழுமத்தின் பங்குதாரராக உள்ளார், கடன் வழங்குபவர்களுக்கும் கடன் பெறுவோருக்கும் ஆலோசனை வழங்குவதில் நிபுணத்துவம் பெற்றவராக விளங்குகிறார்.
இதேவேளை 2022 ஜனவரி 15ஆம் திகதியன்று பிரித்தானிய தமிழ் சட்டத்தரணிகள் சங்கம் தனது முதலாவது செயற்குழு கூட்டத்தை நடத்தியது. இதன்போது 2022 ஆம் ஆண்டிற்கான செயற்குழுவின் தலைவராக கலாநிதி எஸ் செல்வனை தெரிவுசெய்தது. அத்துடன் நிர்வாகக் குழு உறுப்பினர்களாக - நலோ நம்பிராஜா, சிந்து ஞானலிங்கம், காயா கண்ணன், அருண் திருச்செல்வம் ஆகியோர் நிர்வாகக் குழுவுக்கு தெரிவுசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.