சுருக்கு வலைகளுடன் சிக்கிய பிரதேச சபை உறுப்பினரின் உதவியாளர் - அதிகாலையில் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை
சுருக்கு வலைகளுடன் பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினருக்கு சொந்தமான வாகனம், அதில் கொண்டு செல்லப்பட்ட சுருக்கு வலைகளும் வெற்றிலை கேணி கடற்படையினரால் கைப்பற்றப்பட்டதுடன், அதில் பயணித்த உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று(13.06.2026) 3 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுருக்கு வலைகளுடன் தவிசாளரின் உதவியாளர் கைது
குறித்த பருத்திதுறை பிரதேச சபை உறுப்பினர், நீண்டகாலமாக சுருக்கு வலை தொழிலாளர்களுக்கு ஆதரவளித்துக்கொண்டு அதற்கு எதிராகவும் நடந்து கொள்வது போன்று குரலெழுப்பி வந்த நிலையில், இன்றைய தினம் வசமாக சிக்கியுள்ளார்.

அண்மைக்காலமாக சட்ட விரோத சுருக்கு வலை தொழில் வடமராட்சி கிழக்கு பகுதியில் அதிகரித்து வரும் நிலையில் கடர்ப்படையினர் நேற்றும் இன்றும் கரை ஓரமாக தேடுதல் நடத்தி வந்தனர்.
குறித்த பருத்தித்துறை பிரதேச சபை உறுப்பினர் இலங்கை தமிழரசுக் கட்சியின் வடமராட்சி கிழக்கு அமைப்பாளர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கைப்பற்ற பட்ட வாகனம், சுருக்குவலை, கைது செய்யப்பட்ட நபர் ஆகியோர் உரிய சட்ட நடவடிக்கைக்காக நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
மகாநதி சீரியலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தது... அழுது கண்ணீர்விட்ட நடிகர்கள், எமோஷ்னல் வீடியோ Cineulagam