அரச வங்கியொன்றில் 3 கோடி ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ஹொரணையில் அரச வங்கி ஒன்றில் 3 கோடியே 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல்போன சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள வங்கியின் உதவி முகாமையாளரை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஹொரணை பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வங்கியின் உதவி முகாமையாளரான 54 வயதுடைய சந்தேகநபருக்கே இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
வங்கியின் நடைமுறைகள் குறித்த அறிக்கை
சந்தேகநபர் இன்று (09) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போது, சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுச்சொத்துச் சட்டத்தின் கீழ் மேல்நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்ப்பதாகவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திற்குத் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய, ஏடிஎம் இயந்திரங்களுக்காக எடுத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் பணத்திற்கும், வங்கியின் களஞ்சிய அறையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட பணத்திற்கும் இடையிலான தொடர்பைக் கண்டறியுமாறும் உத்தரவிட்டுள்ளது.
மேலும், சம்பவத்துடன் தொடர்புடைய வங்கியின் நடைமுறைகள் குறித்த அறிக்கையொன்றினையும் நீதிமன்றம் கோரியுள்ளது.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பில் உணவகமொன்றில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்து! மூவர் உயிரிழப்பு - மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதி
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 25