யாழ். இளைஞர்களிற்கு அமைச்சர் நாமலினால் கிடைத்த உதவி
அண்மையில் யாழ். சென்றிருந்த அமைச்சர் நாமல் ராஜபக்ச(Namal Rajapaksha) அப் பகுதியில் உள்ள கலைமகள் விளையாட்டுக் கழகத்திற்கு விஜயம் செய்திருந்தார்.
அதன் போது அவ் விளையாட்டுக் கழகத்தின் உறுப்பினர்கள் தமது களகத்திற்கு உடற்பயிற்சி உபகரணங்கள் வேண்டும் எனும் கோரிக்கையினை அமைச்சரிடம் முன்வைத்தனர்.
விளையாட்டுக் கழகத்தின் கோரிக்கைக்கு அமைவாக உடற் பயிற்சி உபகரணங்கள் இன்றைய தினம் பிரதமரின் இணைப்புச் செயலாளர் காசிலிங்கம் கீதநாத் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாமலின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
On Min.@RajapaksaNamal's recent visit to #Jaffna, the Kalaimahal Sports Club requested for a gym facility. As per the Sports minister's instructions, a container gym unit was successfully handed over to the club in Nallur today. #ජයගමු #FitSriLanka @MoYS_SriLanka pic.twitter.com/HGatO4quc4
— G. Cassilingham (@CassilingamG) October 3, 2021