பசி பட்டினியோடு வாழ்கின்ற மக்களுக்கு உதவி திட்டம்: மைக்கல் அபல்டன்(Photo)
திருகோணமலை மாவட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் சிலரை நியூசிலாந்து நாட்டின் இலங்கைக்கான துதுவர் மைக்கல் அபல்டன் இன்று (17) திருகோணமலை ப்ளூ நட்சத்திர விடுதியில் சந்தித்துள்ளார்.
மேலும், இரண்டு நாட்களாக திருமலை பிரதேசத்திற்கு விஜயம் செய்து திருமலை மாவட்ட அபிவிருத்தி மற்றும் உட்கட்டமைப்பு தொடர்பான பல்வேறு விடயங்களை ஆராய்ந்து வருகின்றார்.
ஊடகவியலாளர் சந்திப்பு
இதற்கமைய, சிரேஷ்ட ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் மற்றும் தற்போது ஏற்பட்டிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையை எவ்வாறு ஊடகவியலாளர்கள் எதிர் கொள்கின்றார்கள் என பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் ஊடகவியலாளர்களின் செயற்பாடு, தற்போது செயலாற்றுவதில் எவ்வாறான இடர்பாடுகள் ஏற்பட்டுள்ளது எனவும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
எதிர்கால திட்டம்
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளவுள்ள திட்டம் தொடர்பாகவும் எதிர்காலத்தில் பசி பட்டினியோடு வாழ்கின்ற மக்களுக்கு நியூசிலாந்து அரசாங்கம் மூலம் பல்வேறு உதவிகளை வழங்க காத்திருப்பதாகவும் இதன்போது நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் ஊடகவியலாளருக்கு தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற விவசாயம் மற்றும் கால்நடை விவசாயத்திற்கு
பல்வேறு உதவிகளை நியூஸிலாந்து அரசாங்கத்திடமிருந்து பெற்று வழங்குவதற்கு
முயற்சி செய்வதாகவும் இதன்போது தெரிவித்துள்ளார்.