ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக ரணில்..!
ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க போட்டியிட உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் ஜனாதிபதி தேர்தல் ஒன்றுக்கு ஆயத்தமாகி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
களமிறக்கப்படும் ரணில்
பொது வேட்பாளர் என்ற அடிப்படையில் ரணில் களமிறக்கப்படுவார் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் எவரும் களமிறக்கப்பட மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு பொதுஜன முன்னணி ஆதரவளிக்கும் எனவும், பிரதமர் பதவிக்கு ராஜபக்ச ஒருவரை நியமிக்கும் இணக்கப்பாட்டின் கீழ் இவ்வாறு ஆதரவளிக்கப்பட உள்ளதாகவும் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.