நசீர் அஹமட்டிற்கு பதிலாக ஒருவரை நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை
நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அஹமட்டை கட்சியில் இருந்து வெளியேற்றுவதற்கான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீர்மானத்தை உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து, அவருக்கு பதிலாக ஒருவரை நியமிக்கும் வர்த்தமானியை வெளியிடுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் மற்றும் நாடாளுமன்ற செயலாளர் ஆகியோருக்கு கட்சி கடிதம் எழுதியுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிசாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அஹமட் கடந்த வெள்ளிக்கிழமை (06.10.2023) முதல் நாடாளுமன்ற உறுப்பினர் நிலையில் இருந்து நிறுத்தப்பட்டார்.
இந்தநிலையில் அவருக்கு பதிலாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர்
மௌலானாவே அடுத்த நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாவார் என்றும் காரியப்பர்
குறிப்பிட்டுள்ளார்.





திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
