ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு நிதி உதவி
இலங்கையின் சுகாதாரப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும், அனைவருக்கும் சுகாதார சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி நிதி உதவியை வழங்கியுள்ளது.
'அனைவருக்கும் ஒருங்கிணைந்த சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஆளுகையை வலுப்படுத்துதல்' என்ற திட்டத்திற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கியின் வழக்கமான மூலதன நிதியில் இருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடனும், தொற்றுநோய் தயார்நிலை மற்றும் தடுப்புக்கான அறக்கட்டளை நிதியிலிருந்து 6.9 மில்லியன் அமெரிக்க டொலர் மானியமும் வழங்கப்படவுள்ளது.

ஜே.கே. பாயின் நண்பரிடமிருந்து கசிந்த அதிர்ச்சியூட்டும் ஒலிப்பதிவு.. தக்ஸியின் முதல் கணவரும் சிறையில்!
இரண்டாம் நிலை சுகாதார சேவை
இதனூடாக மொத்தமாக 106.9 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கப்பெறுகிறது.
இந்தத் திட்டமானது, முதல் பரிந்துரை சேவையாக இரண்டாம் நிலை சுகாதார சேவைகளின் தரத்தையும் செயல்திறனையும் மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.
இது, இரண்டாம் நிலை சுகாதார சேவைகளை மேம்படுத்துதல், தொற்றுநோய் தடுப்பு, தயார்நிலை மற்றும் பதிலளிப்பை வலுப்படுத்துதல், சுகாதாரத் துறையின் தொழில்நுட்பத் திறனை மேம்படுத்துதல் மற்றும் மருந்து விநியோகச் சங்கிலியை நிர்வகித்தல் ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளை இலக்காகக் கொண்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் சார்பில் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெருமவும், ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் இலங்கை வதிவிடத் திட்டத்தின் பணிப்பாளர் தகாஃபுமி கடோனோவும் இன்று கொழும்பில் உள்ள திறைசேரியில் கடன் மற்றும் மானிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ரூ.400 கோடி மதிப்புள்ள நிறுவனத்திற்கு சொந்தக்காரர்.., தற்போது தேர்தலில் போட்டியிட விருப்பம் News Lankasri
