பாகிஸ்தான் நாடாளுமன்ற உறுப்பினர் நிலையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இம்ரான் கான்
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ஊழல் நடவடிக்கைகளில் குற்றவாளி எனக் கண்டறியப்பட்டு அவரை நாடாளுமன்ற உறுப்பினர் நிலையிலிருந்து தகுதி நீக்கம் செய்துள்ளதாக, பாகிஸ்தான் தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
எனினும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சி, இந்த தடையை உடனடியாக நிராகரித்துள்ளது.
அத்தகைய தீர்ப்பை வழங்குவதற்கான ஆணையத்தின் அதிகார வரம்பையும் அந்த கட்சி சவாலுக்கு உட்படுத்தியுள்ளது.
போராட்டத்திற்கு அழைப்பு
இதற்காக இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும், ஆதரவாளர்களை தெருக்களில் இறங்கிப் போராடுமாறும் அந்த கட்சி அழைப்பு விடுத்துள்ளது.
பாகிஸ்தானில் வெளிநாட்டு பிரமுகர்கள் அரச தலைவர்களுக்கு வழங்கும் பரிசுகள் தோஷாகன என்ற அரச திணைக்களத்தில் வைப்புச் செய்யப்படுகின்றன.
இந்த தோஷாகன திணைக்களம் 1970 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இந்தநிலையில், கடந்த ஆண்டு இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபி ஆகியோர், வெளிநாட்டு பிரமுகர்களிடம் பெற்ற பரிசுகளை தோஷாகனாவிலிருந்து பெற்று பின்னர் அதனை விற்பனை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தேர்தல் ஆணையகம்
இந்த குற்றச்சாட்டை எதிர்கட்சி சுமத்தியிருந்தது. இந்த குற்றச்சாட்டை விசாரணை செய்த நிலையிலேயே அந்த நாட்டின் தேர்தல் ஆணையகம் இம்ரான் கானை நாடாளுமன்ற உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கியுள்ளது.
பாகிஸ்தானின் தோஷகனா விதிகள் அனைத்து பரிசுகளையும் திணைக்களத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறுகிறது.
இருப்பினும், பரிசுகளை விற்பது கண்டிப்பாக சட்டவிரோதமானது அல்ல என்றாலும், பலர் அதனை நெறிமுறையற்றதாகவும் தார்மீக ரீதியற்றதாகவும் கருதுகின்றனர்.
இந்தநிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், தாம் பெற்ற பரிசுகளை
வேண்டுமென்றே மறைத்ததாகவும்,பின்னர் அவற்றை விற்பனை செய்ததாகவும் குற்றம்
சுமத்தப்பட்டுள்ளார்.

முதல் முறையாக பிரான்சுக்கு வெளியே.., ரஃபேல் விமானத்தின் முக்கிய பாகம் இந்தியாவில் தயாரிப்பு News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri
