பவன் ரத்நாயக்கவின் திறமையைப் பாராட்டிய அஸ்வின்
இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், இலங்கையின் - பவன் ரத்நாயக்கவின் துடுப்பாட்ட திறமை மற்றும் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ளும் திறமையைப் பெரிதும் பாராட்டியுள்ளார்.
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில், பிரித்தானியா நிர்ணயித்த 430 ஓட்டங்கள் கொண்ட பிரம்மாண்ட இலக்கை இலங்கை அணி வெற்றிகரமாக முறியடித்தது.
64 ஆட்டங்கள்
போட்டியில் 106 பந்துகளில் 130 ஓட்டங்கள் விளாசிய இளம் வீரர் பவன் ரத்நாயக்க (Pavan Rathnayake) ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்தநிலையில், இலங்கை அணி திடீரென பல திறமையான துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கி வருகிறது; இது அவர்களுக்கு மிகவும் நம்பிக்கை அளிப்பதாக உள்ளது அஸ்வின் கூறியுள்ளார்.
பவன் ரத்நாயக்க முதல்தரப் போட்டிகளில் 64 ஆட்டங்களில் விளையாடி, 50க்கு நெருங்கிய சராசரியுடன் 4,200 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளதையும், அஸ்வின் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வளவு சிறப்பான சாதனைகளை வைத்திருந்தும் அவரை ஏன் இன்னும் இலங்கை டெஸ்ட் அணியில் சேர்க்கவில்லை என அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார்.