பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ மற்றும் புகைப்படங்கள்: முன்பிணைக் கோரி நீதிமன்றில் மனுத்தாக்கல்
பேராசிரியர் ஆசு மாரசிங்கவுக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் இணைந்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய ஆதர்ஷ கரந்தன, முன்பிணைக் கோரி, நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
பேராசிரியர் மாரசிங்கவினால் செய்யப்பட்ட முறைப்பாடு தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், தாம் கைது செய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகளை தடுக்கும் வகையில் நீதிமன்றில் அவர் முன்பிணை மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பரபரப்பை ஏற்படுத்திய காணொளி
பேராசிரியர் ஆசு மாரசிங்க தமது வளர்ப்பு நாயை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் காணொளி பதிவு ஒன்று, ஆதர்ஷ கரந்தன மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோரால் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்ட பின்னர், அது வைரலாகியுள்ளது.
எனினும் ஊடகங்களுக்கு வழங்கப்பட்ட அறிக்கைகள் முற்றிலும் பொய்யானவை என்றும், இதற்காக செம்மைப்படுத்தப்பட்ட காணொளி பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் ஆசு மாரசிங்க முறைப்பாட்டை செய்திருந்தார்.
500 மில்லியன் ரூபா மற்றும் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு
இந்த விண்ணப்பம் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு வந்த போது, குற்றப்புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் உட்பட்டவர்களை எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பியுள்ளது.
இதேவேளை, ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமக்கு எதிராக அவதூறான கருத்துக்களை
வெளியிட்டதாகக் கூறி முறையே ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் ஆதர்ஷ கரந்தனவிடம்
முறையே 500 மில்லியன் ரூபா மற்றும் ஒரு பில்லியன் ரூபா நட்டஈடு வழங்கவேண்டும்
என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னாள் ஆலோசகர் பேராசிரியர் ஆசு மாரசிங்க கோரிக்கை கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



