நாட்டை ஆபத்தில் விட்டுவிட்டு ஓடிய எதிர்கட்சி தலைவர் சஜித்: அசாத் சாலியின் கடுமையான சாடல்
நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமையின் போது நாட்டையும், மக்களையும் பொறுப்பேற்காது பிரச்சினையை கண்டு ஓடி ஒளிந்தவரே எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச என்று முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்கும் வகையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூடத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்ட போது, பொறுப்புக்களை ஏற்குமாறு முன்வைக்கப்பட்ட கோரிக்கையை மறுத்த தலைமைத்துவமே எதிர்கட்சி தலைவரின் தலைமைத்துவம்.
இருப்பினும், அவ்வாறானதொரு அசாதாரண நிலையிலும் முன்வந்து நாட்டை பொறுப்பேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தற்போது பல நடவடிக்கைகளை மேற்கொண்டு ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்” எனவும் அசாத் சாலி கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து அவர் மேலும் கருத்து தெரிவித்த விடயங்களுடன் வருகின்றது பின்வரும் காணொளி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |