கோட்டாபய விடுத்த உதவி கோரிக்கையை கண்டுகொள்ளாத ரஷ்யா
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எண்ணெய் கொள்வனவு தொடர்பில் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
ஆனால் ரஷ்யாவிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இது தொடர்பில் ஜனாதிபதி தனிப்பட்ட ரீதியில் பேசியதாக அமைச்சர் தெரிவித்தார்.

ரஷ்யா உட்பட வேறு எந்த நாட்டிலிருந்தும் குறைந்த விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால், அதற்காக பாடுபடுவேன் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ரஷ்யாவுக்கு எதிராக மேற்குல நாடுகள் தடை விதித்துள்ளமையினால், ஆசிய நாடுகளுடான வர்த்தக நடவடிக்கையை ரஷ்ய தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில் குறைந்த விலையில் மசகு எண்ணெயை வழங்க பல நாடுகளுக்கு இணக்கம் வெளியிட்டுள்ளது. இந்தியா அதிகளவான மசகு எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் கொள்வனவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 13 மணி நேரம் முன்
உலகமே எதிர்பார்த்த ஈரானின் புதிய உச்ச தலைவரின் முதல் அறிக்கை! தன்னை முன்னிலைப்படுத்த தவறிய மொஜ்தபா கமேனி
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்
தஞ்சாவூர் பெரிய கோவிலுக்கு சென்றுள்ள அய்யனார் துணை சீரியல் பிரபலங்கள்.. புகைப்படத்தை பாருங்க Cineulagam