பிரித்தானியாவில் வீட்டு விலைகளில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! - வெளியாகியுள்ள அறிவிப்பு
கடந்த ஆண்டில், இங்கிலாந்தில் வீட்டு விலைகள் பெரும் உயர்வை கண்டுள்ள நிலையில், Rightmove இன் புதிய புள்ளிவிவரங்கள் நவம்பர் மாதத்தில் வீடுகளின் விலைகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கின்றன.
அப்படியென்றால் எவ்வளவு விலை குறைவு ஏற்பட்டுள்ளன? இது வெறும் தற்காலிக செயலா? அல்லது வீட்டின் விலைக் குமிழியில் வெடிப்பு ஏற்படுமா என்பது குறித்து பார்வையிடலாம்.
வீட்டு விலைகளில் என்ன நடக்கிறது?
Rightmove இன் கூற்றுப்படி, நவம்பரில் ஒரு வீட்டின் சராசரி விலை £2,000க்கு மேல் குறைந்துள்ளது. ஒரு வீட்டின் சராசரி விலை தற்போது £342,401 என்று தரவு காட்டுகிறது, இது ஒக்டோபரில் இருந்ததை விட 0.6 வீத (£2,044) குறைவு.
ஜனவரி மாதத்திற்குப் பிறகு, விலைகள் 0.9 வீதம் குறைந்ததால், இது மிகப்பெரிய மாதாந்திர வீழ்ச்சியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பரில் சராசரி விலைகள் ஏன் வீழ்ச்சியடைந்தன?
Rightmove இன் சொத்து தரவுகளின் இயக்குனர் டிம் பன்னிஸ்டரின் கூற்றுப்படி, இந்த சரிவு நீண்ட காலம் நீடிக்க வாய்ப்பில்லை. "இந்த கீழ்நோக்கிய விலைப் போக்கு ஒப்பீட்டளவில் குறுகிய காலமாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,
இருப்பினும் அவசரத்தில் இருக்கும் விற்பனையாளர்கள் டிசம்பரின் பெரும்பகுதிக்கு வாங்குபவர்களை ஈர்க்க வேண்டும்.” கிறிஸ்மஸ் முடிந்தவுடன், பாக்ஸிங் டே தினம் முதல், சொத்தை தேடும் நபர்களில் ஏற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று பானிஸ்டர் கூறுகிறார்.
கிறிஸ்மஸுக்குப் பிந்தைய அவசரம் "மீண்டும் விலைகளை உயர்த்தும் மற்றும் வாங்குபவர்களிடமிருந்து போட்டியை அதிகரிக்கும்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்போது வீடு வாங்க வேண்டுமா?
தற்போது புதிய வீட்டைத் தேடும் வாங்குபவர்களுக்கு, புத்தாண்டில் விலைகள் மீண்டும் உயரத் தொடங்கும் முன், இப்போது மற்றும் கிறிஸ்துமஸுக்கு இடைப்பட்ட காலம், ஒரு வீட்டை வாங்க ஒரு சிறந்த நேரமாக இருக்கும்.
எவ்வாறாயினும், ஒவ்வொரு கொள்வனவு செய்பவரும் இப்போது வீட்டை வாங்க முடியாது. எல்லாவற்றிற்கும் மேலாக, சமீபத்திய விலை சரிவு இருந்தபோதிலும், வீட்டு விலைகள் இன்னும் உச்சத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
நீங்கள் இப்போது வாங்கத் தயாராக இல்லை என்றால் என்ன செய்வது?
நீங்கள் வாங்கும் நிலையில் இல்லை என்றால், நீங்கள் செய்யக்கூடிய சிறந்த விஷயம், உங்கள் வைப்புத்தொகையைத் தொடர்ந்து உயர்த்துவதுதான். உங்கள் வீடு வாங்கும் பயணத்திற்குத் தயாராவதற்கு நீங்கள் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வழிமுறைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.